Powered By Blogger

Tuesday, October 18, 2011

Porunthal data from AMS

http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/00fbeac16ce294e7

ஐயா கணேசன்,


பொருந்தல் அகழாய்வின் கால ஆய்வு அறிக்கையை பேரா. க இராசனிடம் இருந்து பெற்று
மின் தமிழில் வழங்கினமைக்கு உம்மைப் பாராட்டுகிறேன். எழுத்து பொறித்த
மட்கலனில் எழுதப்பட்டுள்ள எழுத்துகளை படித்த பிறகு அவை வய்ர அல்ல என்பதை
உறுதி செய்து கொண்டேன். அதில் மைசூர் பாகு அல்லது டைமண்ட் போல் உள்ள எழுத்து
பிராமி அல்ல எனவே அது வகர ஒலியும் அல்ல. அது சிந்து எழுத்து என்பது தெளிவு
அந்த எழுத்தின் மேல் மூலையில் கோடு வெளியே வலிக்கப்பட்டு உள்ளது. எனவே அது
சிந்து ஒலியில் நா. அடுத்துள்ள எழுத்து பிராமியில் யகரம், சிந்து எழுத்தில்
அதன் ஒலி ங. மூன்றாவது எழுத்தான ஒரு நெடுங் கோடு பிராமியில் ரகர மெய், சிந்து
எழுத்தில் அதன் ஒலி ன். அதன்படி சிந்து முதலெழுத்து மற்றன பிராமி எனக்
கொண்டால் அதை நாயர் என்று தான் படிக்க வேண்டும். முழுவதும் சிந்து எழுத்தாக
கருதினால் அதை நாஙன்>நாங்கன் என்றே படிக்க வேண்டும். நடு எழுத்தை மட்டும்
பிராமியின் யகரம் முதல் எழுத்தும் மூன்றாம் எழுத்தும் சிந்து எழுத்து எனக்
கொண்டால் அதை நாயன் என படிக்க வேண்டும். ஆனால் அது வய்ர அல்ல எனபது மட்டும்
தெளிவு. நாயன் என்ற பெயர் சிநது முத்திரைகளில் உண்டு. நாயன்மார், E K.
நாயனார் என்ற சொற்களை ஈண்டு நோக்குக.

வய்ர என படித்துக் காட்டியது யார் என்று க. இராசனிடம் அறிந்து சொல்ல
வேண்டுகிறேன். அது தவறு.


சேசாத்திரி


> ஐயா கணேசன்,



எனது முடிவு இதில் ஒரு எழுத்து கூட பிராமியே அல்ல மூன்றும் சிந்து
எழுத்துகளே. நாங்கன் எனப் படிப்பதே முறை.

சேசாததிரி
ஐயா கணேசன்,

> எனது முடிவு இதில் ஒரு எழுத்து கூட பிராமியே அல்ல மூன்றும் சிந்து
> எழுத்துகளே. நாங்கன் எனப் படிப்பதே முறை.


> சேசாததிரி



எனக்கும் இது தமிழ் பிரமியா? என்பது ஐயமே.

வ எப்படி தமிழ்-பிராமியில் இருக்கும்?
ஐராவதம் புத்தகத்தில் இருந்து காட்டலாமே.
டையமண்ட் வடிவத்தில் இல்லை என்று
தெளிவாக்கலாம் - படங்கள் கொண்டு.



நா. கணேசன்

ஐயா படவிளக்கம் தந்து இரண்டு நாள்களுக்கு மேல் ஆகிவிட்டது. க இராசனிடம்
தொட்ர்பு கொண்டீரா? என்ன சொல்கிறார் அவர்,


சேசாத்திரி

சேசாத்திரி.

நண்பர் பேரா. ராஜனுடன் பேசினேன். ஒய். சுப்பராயலு போன்றோர்
வயிர என்று படிப்பதைச் சுட்டிக்காட்டினார்.


பேரா. நாச்சிமுத்து பயிர என்னும் அப்பகுதிக் கூட்டத்தார்
பெயராக இருக்கலாம் என்கிறார்.


பகரத்தை விட வகரம் பொருந்துகிறது.
கிராபிட்டி இல்லை, எழுத்து என்று சுப்பராயலு போன்றோரும்
கருதுகின்றனர்.


நா. கணேசன்

சிந்து எழுத்தை கிராபிடி என்பதால் எழும் தவறுகள் பேராளம்.


சிந்து எழுத்தைப் பற்றித் தெரியாது.

ஆனால், பொருந்தல் எழுத்துப் போல,
விஞ்ஞான முறையில் இன்னும் நிறைய இடங்களில்
கிட்டும் என்று நம்புகிறேன். Pre-Asokan.
ஒய். சுப்பராயலு போன்றோரே எழுத்து என்று இவற்றை
சொல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


நா. கணேசன்
நண்பர் சேசாத்திரி அவர்களுக்கு,

> வணக்கம். தாங்கள் சிந்து அறிஞர் மதிவாணன் போன்று உருவாகுவதில் மெத்த மகிழ்ச்சி
> அடைகிறேன்.


> ஆறுமுகம்.



அன்பு ஆறுமுகம்,

நீங்களும் முயன்றால் மதிவாணன் போல சிந்து “எழுத்து” படிக்கக்
கூடும். நான் பார்ப்போலா அவர்கள் உழைத்து அச்சிட்ட 3 தொகுதி
கார்ப்பஸ் விரும்பிப் பார்ப்பவன். சிந்து எழுத்து என்று இன்னும்
உறுதியாகலை. ப்ரொட்டோ-ரைட்டிங் என்ற அளவில் கொள்ளக்
கூடும். ஆனால் தனித்தனி எழுத்தாய் படிப்பது என்பது உங்கள்
கையில் இருக்கிறது. பலரும் பல விதமாய்ப் படிக்கிறார்கள்,.


------------


தொல்லியல் பேரா. கா. ராஜன் ஆராய்ந்து கண்டுபிடித்துள்ள
எழுத்துக்கள் வேறு. அதை அத்துறையினர் - சுப்பராயலு,
ஐராவதம், நடன. காசிநாதன், புலவர் ராசு, வேதாச்சலம்,
சு. ராஜவேலு, ... - படிக்கட்டும். கே. வி. ராமன் ப்ரி-அசோகன்
எழுத்து இருக்கிறது என்கிறார்.


நா. கணேசன்


ஆனால், பொருந்தல் எழுத்துப் போல,
> விஞ்ஞான முறையில் இன்னும் நிறைய இடங்களில்
> கிட்டும் என்று நம்புகிறேன்.



கிட்டட்டும் கிட்டினால் அது தமிழின் தொன்மையை இன்னும் சான்று அடிப்படையில்
பின்னோக்கிக் கொண்டு செல்லும். சமற்கிருதத்திற்கு அத்தகு வாய்ப்பு அரிதே..


> Pre-Asokan. ஒய். சுப்பராயலு போன்றோரே எழுத்து என்று இவற்றை
> சொல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
> எங்கே சொல்லுகிறார் இந்த ஒரு சான்று போதாது. வய்ர என்பது பிராகித சொல் எனவே
> அது கி.மு. 1 ஆம் நூற்றாண்டினது என்று தானே அவர் சொல்கிறார். உணமையில் அவர்
> அமெரிக்க ஆய்வு அறிக்கையை பொய் என்று தள்ளப் பார்க்கிறார். இதற்கு அவருடைய
> இந்து நாளிதழ் அறிக்கையே போதும்.


சேசாத்திரி






எனக்கும் இது தமிழ் பிரமியா? என்பது ஐயமே.


> வ எப்படி தமிழ்-பிராமியில் இருக்கும்? ஐராவதம் புத்தகத்தில் இருந்து
> காட்டலாமே. டையமண்ட் வடிவத்தில் இல்லை என்று
> தெளிவாக்கலாம் - படங்கள் கொண்டு. நா. கணேசன்
> வகரம் பிராமியில் சுவர் கடிகாரத்தின் Pendulum போல் இருக்கும். அதை



இணைத்து உள்ள பிராமி எழுத்து படத்தில் கண்டு தெளியலாம்.

போலிகை(sample)ஆக தன்னஅ சா கேனத்தன் என நான் படித்த சிந்து முத்திரையில்
இடம் பெறும் டையமண்டையும் ஒட்டுகிறேன்.


சேசாத்திரி

No comments:

Post a Comment